ட்ரம்பின் ஆட்சியால் தங்கள் நாட்டிற்கு பயனில்லை... அவுஸ்திரேலியா, ஜப்பான் மக்கள் கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தங்கள் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என பெரும்பான்மையான அவுஸ்திரேலிய, ஜப்பானிய மற்றும் இந்திய மக்கள் நம்புகின்றனர்.
சீர்குலைக்கும் முடிவுகள்
ஆசியாவில் நான்கு நாடுகளில் உள்ள மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆசியாவிற்கு உதவிகரமாக இருப்பதை விட தீங்கு விளைவிப்பதாகவே ட்ரம்பின் நடவடிக்கைகள் இருப்பதாக அதிகமான அவுஸ்திரேலியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் உள்ள அமெரிக்க ஆய்வுகள் மையம் முன்னெடுக்க ஆய்வு ஒன்றில், அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒவ்வொன்றிலும் 1,000 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில்,
அமெரிக்காவின் சீர்குலைக்கும் முடிவுகளால் ஆசிய நாடுகள் அதிர்வடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்பட்ட அந்த ஆய்வில், அவுஸ்திரேலியர்களில் 56% பேரும், இந்தியர்களில் 54% பேரும், ஜப்பானியர்களில் 59% பேரும் ட்ரம்பின் ஜனாதிபதி பதவி தங்கள் நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என நினைக்கிறார்கள்.
அமெரிக்க நட்புறவு தங்கள் நாட்டை மிகவும் பாதுகாப்பானதாக்கியதாக 42% அவுஸ்திரேலியர்கள் மட்டுமே கூறியுள்ளனர். 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இது 14 சதவீதம் சரிவு. முதல் முறையாக ஆதரவு பெரும்பான்மைக்குக் கீழே சரிந்துள்ளது.
தவறான தகவல்கள்
அமெரிக்க கூட்டணி தங்களை மிகவும் பாதுகாப்பான நாடாக்கியதாகக் கூறிய ஜப்பானிய மக்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 5 சதவீதம் குறைந்து 47% என பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் அரசியல் வன்முறை மற்றும் தவறான தகவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவுஸ்திரேலியர்களும் இந்தியர்களும் அமெரிக்காவை ஆசியாவில் பயனுள்ளதாகக் கருதுவதற்குப் பதிலாக தீங்கு விளைவிப்பதாகவே பார்க்கிறார்கள்.
ஆனால், சீனாவையும் இந்த நான்கு நாட்டு மக்கள் எதிரியாகவேப் பார்க்கிறார்கள். ஆசியாவில் சீனாவை உதவிகரமாக இருப்பதற்குப் பதிலாக தீங்கு விளைவிப்பதாக அவுஸ்திரேலியர்கள் (48%), அமெரிக்கர்கள் (40%), ஜப்பானியர்கள் (58%) மற்றும் இந்தியர்கள் (46%) அதிகமாகப் பார்க்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |