ரஷ்ய எண்ணெய் விவகாரம்... துருக்கியை கட்டாயப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப்
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை துருக்கி கைவிடும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எர்டோகன்
அமெரிக்காவின் மேம்பட்ட F-35 போர் விமானங்களை வாங்கும் பொருட்டு துருக்கி மீதான தடைகளை நீக்கவும் அமெரிக்கா தயார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உடனான சந்திப்பில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கும் பொருட்டு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருந்து விலகுமாறு ட்ரம்ப் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.
மேலும், ரஷ்ய தரப்பில் போர் நிறுத்தம் தொடர்பில் உறுதியான நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படாத நிலையில், உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் மீட்கப்படும் சூழல் உருவாகும் என ட்ரம்ப் அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ட்ரம்ப் நம்பிக்கை
இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் துருக்கி சாதகமான முடிவெடுக்கும் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய எண்ணெய் வாங்கும் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் யோசனையும் ட்ரம்ப் முன்வைத்துள்ளார்.
F-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் அமெரிக்கத் தடைகளை நீக்குவதற்கு ட்ரம்பின் ஒப்புதலைப் பெறுவதற்காக, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு எர்டோகன் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |