தென் கொரியா மீதான வரியை 25% ஆக அதிகரித்த அமெரிக்கா: டிரம்பின் அதிரடி நடவடிக்கை
தென்கொரியா மீதான வரியை உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்பின் வரிக் கொள்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தங்கள் நாட்டின் மீது பல்வேறு உலக நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி பல்வேறு நாடுகள் மீது சுங்க வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்தியா மீது 25% வரை வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக அதிகரித்தார்.

தென் கொரியா மீது கூடுதல் வரி
இந்நிலையில் தென்கொரியா மீது விதிக்கப்பட்ட 15% வரியை 25% ஆக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் ஏற்பட்டு வரும் தாமதத்தை தொடர்ந்து இந்த வரி உயர்வு நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரி அதிகரிப்பு குறித்து தங்களுக்கு எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை என்றும், அமெரிக்க அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |