ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20% அமெரிக்க படைகள் வெளியேற்றம்: டிரம்பின் புதிய திட்டம்
ஐரோப்பாவில் அமெரிக்க படைகளின் இருப்பை டிரம்ப் குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படைகளின் எண்ணிக்கை குறைப்பு
அமெரிக்க ராணுவ படையின் இருப்பை(presence) 20% வரை குறைக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து கிட்டத்தட்ட 20,000 அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரும்ப பெற திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
Donald Trump plans to reduce the US military presence in Europe by 20%
— NEXTA (@nexta_tv) January 23, 2025
US President Donald Trump is planning to withdraw 20,000 American troops from Europe, which would reduce the current contingent by approximately 20%, Italian news agency ANSA reports, citing a European… pic.twitter.com/WiOqh7OSXE
ஐரோப்பிய ராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள் காட்டி இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்துள்ள தகவலில், இந்த முடிவு தற்போது உள்ள படைகளில் 20% குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஐரோப்பாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ படைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதி வழங்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்க படைகளை பராமரிப்பதற்காக எவ்வளவு தொகை ஐரோப்பிய நாடுகளிடம் வாங்கலாம் என்பதை யூகிப்பது மிக விரைவான நடவடிக்கை என்றும் ANSA தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |