உக்ரைன் - ரஷ்யா அமைதியில் சிக்கல் நீடிப்பது ஏன்? உண்மையை போட்டுடைத்த டிரம்ப்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவுக்கு வராததற்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை அடுத்து உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அபுதாபியில் அமெரிக்கா-ரஷ்யா-உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

இதன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 1ம் திகதி நடைபெறும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 20 சதவீதத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில் அதனை திருப்பி அளிப்பது தொடர்பான உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.
உண்மையை போட்டுடைத்த டிரம்ப்
இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவுக்கு வராததற்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டுடைத்துள்ளார்.
அதில், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர். இதுவே பேச்சுவார்த்தையை மிகவும் கடினமானதாக மாற்றுகிறது.

இருப்பினும் விரைவில் அதற்கான சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உக்ரைனின் அதிக பனிப்பொழிவு நிலவுவதால் தற்காலிக போர் நிறுத்தம் குறித்து புடினிடம் பேசியதாகவும், அதை புடின் ஏற்றுக் கொண்டு ஒரு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு வரும் அந்நாடு அழைப்பு விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |