ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே Energy Ceasefire - டிரம்ப் அறிவிப்பு
Trump: Russia-Ukraine Energy Ceasefire Deal: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே Energy Ceasefire ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
Energy Ceasefire
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே “Energy Ceasefire” (ஆற்றல் துறையில் தற்காலிக சமாதான ஒப்பந்தம்) எட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “இது உடனடியாக அமுலுக்கு வருகிறது. இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. உடன்பாட்டை மீற வேண்டாம்!” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சில உக்ரைன் அதிகாரிகளுக்கே இந்த அறிவிப்பு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், அவர்கள் “நாங்களும் இதைப் பற்றி இப்போது தான் படித்தோம்” என்று ஒருவர் CNN-க்கு தெரிவித்தார்.
இதனால், இந்த ceasefire உண்மையில் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கனடா, பின்லாந்து தலைவர்கள் மற்றும் NATO செயலாளர் ஜெனரல் உடன் ஆலோசனை நடத்தியதாகவும், “உக்ரைன் எப்போதும் சமாதான முயற்சிகளை ஆதரிக்கிறது. ரஷ்யாவும் இதை மதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு, டிரம்ப் மற்றும் புடின் இடையே சமீபத்தில் நடந்த ரஷ்ய டீசல் எரிபொருள் விநியோக ஒப்பந்தம் தொடர்பான விவாதத்துக்குப் பிறகு வந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தை ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்திருந்தார்.
உக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி வந்தது. அதேசமயம் ரஷ்யா, உக்ரைனின் ஆற்றல் வசதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியது. இதனால் இரு தரப்பும் ஆற்றல் துறையில் கடுமையான மோதலில் ஈடுபட்டிருந்தன.
இந்த Energy Ceasefire உண்மையில் நடைமுறைக்கு வரும் தகுதி உள்ளதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. உக்ரைன் அதிகாரிகள் அமெரிக்க தரப்பிலிருந்து கூடுதல் விளக்கங்களை எதிர்பார்த்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இந்த அறிவிப்பு போரின் தீவிரத்தை குறைக்கும் புதிய தொடக்கம் ஆகுமா அல்லது இது வெறும் அரசியல் விளையாட்டா என்பதை கவனித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |