8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பு தகவலை வெளியிட்ட டிரம்ப்
இந்தியா, பாகிஸ்தான் மோதலில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிக்கு டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மத்தியஸ்தம் செய்பவராக செயல்பட்டு வருகிறார். 
இந்த நிலையில் மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் பேசிய ட்ரம்ப், "இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் போருக்குப் போவதாகக் கேள்விப்பட்டேன். எட்டு விமானங்கள், ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 8வது விமானம் மிகவும் மோசமாக காயமடைந்தது.
ஆனால், எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நான் சொன்னேன், இது போர். அவர்கள் அதில் ஈடுபட்டிருந்தார்கள். அவை இரண்டு அணு ஆயுத நாடுகள். நீங்கள் சமாதானத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் நான் உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யப் போவதில்லை" என்றார்.
மேலும், இரு நாடுகளும் தனது வர்த்தக அச்சுறுத்தலை எதிர்த்ததாகவும், அவர்களின் மோதலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக அவர் கொசோவோ - செர்பியா மற்றும் காங்கோ - ருவாண்டாவைத் தவிர, தான் பதவியேற்றதில் இருந்து நிறுத்திய 8 மோதல்களில் இந்தியா - பாகிஸ்தான் இராணுவ மோதலும் ஒன்று என தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |