வேறெந்த நாடும் வசூலிக்காத வரியை இந்தியா வசூலித்துள்ளது: முடிவு எட்டாவிடில் எதிர்கொள்ள நேரிடும் - ட்ரம்ப்
இந்தியா நல்ல நண்பராக இருந்தாலும் அதிக வரி வசூல் செய்துள்ளது என டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் இந்தியா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்து, பின் அதனை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக கூறினார்.
அத்துடன் அவர் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கூற, இந்தியா உட்பட பல நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் இதுவரை இந்தியா, அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
டொனால்ட் ட்ரம்ப்
இந்நிலையில் வரி விதிப்பு குறித்து டொனால்ட் ட்ரம்ப் அளித்த நேர்காணலில், "இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால், 20 முதல் 25 சதவீதம் வரை இறக்குமதி வரியை இந்தியா எதிர்கொள்ளக்கூடும். இந்தியா நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவிற்கு அமெரிக்காவிடம் வரி வசூலித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்ப் விதித்த கெடு நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. எனவே இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |