தனித்தனி அறைகளில் உறங்கும் ட்ரம்பும் மனைவியும்: ட்ரம்ப் உளறிக்கொட்டிய விடயங்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவரது மனைவியும் தனித்தனி அறைகளில் உறங்குவதாகக் கூறப்படும் நிலையில், தன் மனைவி குறித்த சில விடயங்களை உளறிக்கொட்டியுள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப் உளறிக்கொட்டிய விடயங்கள்
ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியானபோது, தனக்கு வெள்ளை மாளிகையில் தனி அறைவேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளை முன்வைத்தாராம் அவரது மனைவியான மெலானியா.
இந்நிலையில், தன் மனைவி குறித்த சில விடயங்களை உளறிக்கொட்டியுள்ளார் ட்ரம்ப்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சம்பந்தமில்லாமல் வேறு பல விடயங்கள் குறித்து பேசத்துவங்கிய ட்ரம்ப், தனது மனைவியை அவர் எப்படி அழைப்பார் என்பது போன்ற தனிப்பட்ட விடயங்களையும் உளறிக்கொட்டியுள்ளார்.
தன் மனைவியை ’First Lady’ என்றுதான் அழைப்பேன் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
‘Good night, First Lady, my darling’ என்றுதான் தான் மெலானியாவிடம் கூறுவேன் என்று கூறிய ட்ரம்ப், தன் மனைவியை அப்படி அழைப்பது, தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என தனக்கு நினைவூட்டுவதாகவும், அதனால்தான் அவரை First Lady என அழைப்பதாகவும் கூறியுள்ளார் ட்ரம்ப்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |