நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம்
Trump said about artificial intelligence: அமெரிக்கா செயற்கை நுண்ணறிவுக்குத் தடை விதிக்காது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தங்கள் நாடு செயற்கை நுண்ணறிவுக்குத் தடை விதிக்காது எனக் கூறுகிறார்.
மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக
செவ்வாய்கிழமை அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொழில்நுட்பத் தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கும் சூழலில், செயற்கை நுண்ணறிவு குறித்து டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறிய டொனால்ட் ட்ரம்ப், தங்கள் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசுவதற்கு அதிக நேரம் செலவிடவில்லை என்றார். மேலும் அவர் செயற்கை நுண்ணறிவினை Super Intelligence என்று குறிப்பிடுகிறார்.
அத்துடன் "நாங்கள் சீனாவை விட பெருமளவில் முன்னணியில் இருப்பதால், அவர்கள் எங்களது முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புகிறார்கள். நாங்கள் அதை அப்படியே வைத்திருக்கப் போகிறோம். அமெரிக்கா தடை விதிக்கப் போவதில்லை" என்றார்.