ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம்! ஒப்புக் கொண்ட உக்ரைன் - ரஷ்யா: டிரம்ப் தகவல்
Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்க மாட்டோம்
உக்ரைனும், ரஷ்யாவின் இனி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணம் இல்லை என்றும், உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல்களே காரணம் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ள டிரம்ப், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உக்ரைன் தெரிவித்து இருப்பதாகவும், ரஷ்யாவும் அவ்வாறே ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் உலகின் டீசல் விலை ஏற்றத்திற்கு ரஷ்யா - உக்ரைன் போர் தான் காரணம், ஈரான் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ ஆதரவை பெறும் உக்ரைன்
இதற்கிடையில் உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக மோசமான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் மேலும் மேலும் ரஷ்ய பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.
உக்ரைனுக்கு நேட்டோ ஆதரவு அளிப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும், நேட்டோவின் ஒற்றுமையை சிதைத்து விட முடியும் என்று ரஷ்யா நினைக்கிறது. ஆனால் அது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.