செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரானில் இருந்து தோண்டி எடுப்போம்: டிரம்ப் அறிவிப்பு
ஈரானில் மண்ணுக்கடியில் புதைந்துள்ள யுரேனியத்தை தோண்டி எடுக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல்
ஈரான் அணுசக்தி திட்டங்களை கைவிட மறுப்பதாக குற்றம் சாட்டி பிப்ரவரி மாதம் 28ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்தது.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தி இருந்தது, அப்போது அணுசக்தி திட்டத்திற்காக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கட்டிடத்திற்கு அடியில் புதைந்தது.

இந்நிலையில் ஈரான் அமெரிக்கா இடையே இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தமானது அமுலுக்கு வந்துள்ளது.
மேலும் நிரந்தர போர் நிறுத்தம் மேற்கொள்ள இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.
யுரேனியத்தை தோண்டி எடுப்போம்
அதே நேரத்தில், ஈரானில் புதைந்து இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரானுடன் இணைந்து அமெரிக்காவும் தோண்டி எடுத்து அப்புறப்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரானில் அணு ஆயுதங்களை தயாரிக்க இனி செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்காது என்றும், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை யாரும் தொடவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் எந்தவொரு எதிர் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |