பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டும் ஈரான்: காலக்கெடு குறித்து டிரம்ப் அளித்த பதில்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஆர்வம் காட்டி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டும் ஈரான்
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், ஈரான் அமெரிக்காவுடன் ஒரு முறையான உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
இருநாடுகளுக்கு இடையே மோதல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், ஈரான் நாட்டின் தலைமை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு காலக்கெடு
ஈரானுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு குறித்து பதிலளித்த டிரம்ப். ஈரானுக்காக காலக்கெடு அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று பதிலளித்ததோடு, குறிப்பிட்ட திகதி மற்றும் நிபந்தனைகளை டிரம்ப் வெளியிட மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க கடற்படை நிலைநிறுத்தப்பட்டு இருப்பது குறித்து பதிலளித்த டிரம்ப். படைகளை திரும்ப பெறும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |