கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக அச்சுறுத்தும் ட்ரம்ப்: மன்னர் சார்லஸ் மீது கனேடியர்கள் வருத்தம்
மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார்.
கனேடியர்கள் வருத்தம்
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
ஆக, கனடாவின் தலைவரும் மன்னர் சார்லஸ்தான்.
இந்நிலையில், மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ஆனால், இதுவரை அது குறித்து மன்னர் சார்லஸ் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அதனால், கனேடிய மக்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.
What is the point of having King Charles as our head of state if he feels no need to comment on the ludicrous comments and threats by Trump. Trump has declared economic warfare on Canada, he insults Canadians, including our Head of State. Speak up.
— Bill Brady 🇨🇦 #BuyCanadian 🇨🇦 (@sharemyopinion) February 11, 2025
சமூக ஊடகமான எக்ஸில் கனேடியர்கள் மன்னர் மீதான வருத்தத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.
Disappointed that our Head of State, King Charles 111 has refused to speak up on Trump’ s threat to Canada’s sovereignty. I have met His Majesty personally on many occasions. I like him. But I am sad and disappointed.
— Dr. Hedy Fry (@HedyFry) March 2, 2025
மன்னரை சந்திக்கும் ட்ரூடோ
இந்நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இன்று மன்னர் சார்லசை சந்திக்கிறார்.
ட்ரூடோ மன்னரை சந்திக்கும்போது, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் விடயம் குறித்த பிரச்சினையை மன்னர் முன் எழுப்ப இருக்கிறார் ட்ரூடோ.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |