இந்தியாவிற்கு கிடைக்கும் ஐடி வேலைகளை முடக்கும் டிரம்ப்? - கலக்கத்தில் ஊழியர்கள்
இந்தியாவிற்கு கிடைக்கும் அவுட்சோர்சிங் வேலைகளை முடக்க டிரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுட்சோர்சிங் வேலைகளை முடக்கும் டிரம்ப்?
இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஐடி நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இந்தியாவில் லட்சக்கணக்கான ஊழியர்கள் ஐடி நிறுவனங்களை நம்பி உள்ளனர்.
இதில், பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள், அமெரிக்கா வழங்கும் அவுட்சோர்சிங் வேலையை நம்பி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு வழங்கப்படும் அவுட்சோர்சிங் வேலைகளை முடக்குவதற்கு டிரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா வலதுசாரி ஆர்வலர் லாரா லூமர், "அமெரிக்கா நிறுவனங்கள், இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு தரும் அவுட்சோர்சிங் வேலைகளை முடுக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.
JUST IN:
— Laura Loomer (@LauraLoomer) September 5, 2025
President Trump is now considering blocking US IT companies from outsourcing their work to Indian companies.
In other words, you don’t need to press 2 for English anymore.
Make Call Centers American Again!
இனி ஆங்கிலத்தில் கூற எண் 2 ஐ அழுத்த வேண்டியது இருக்காது. அழைப்பு மையங்களை மீண்டும் அமெரிக்கா மயமாக்குங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ, அமெரிக்காவின் அவுட்சோர்சிங் வேலைகளுக்கு வரி விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவுட்சோர்சிங் வேலைகளை முடக்கினால், இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும்.
இதன் காரணமாக பாரிய அளவில் வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் ஐடி ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |