சீன மாணவர்களின் விசாக்களை உக்கிரமாக ரத்து செய்ய முடிவு செய்த வல்லரசு நாடு

Donald Trump China Student Visa
By Arbin May 29, 2025 03:37 AM GMT
Report

ட்ரம்ப் நிர்வாகம் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

பலர் சிக்கக் கூடும்

சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய வெளிவிவகாரத்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தீவிரமாகச் செயல்படும். சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது முக்கியமான துறைகளில் படிப்பவர்கள் உட்பட பலர் சிக்கக் கூடும் என ரூபியோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சீன மாணவர்களின் விசாக்களை உக்கிரமாக ரத்து செய்ய முடிவு செய்த வல்லரசு நாடு | Trump To Revoke Chinese Students Visas

மட்டுமின்றி, சீனா மற்றும் ஹொங்ஹொங்கிலிருந்து வரும் அனைத்து எதிர்கால விசா விண்ணப்பங்களையும் ஆய்வு செய்வதற்காக, விசா அளவுகோல்களையும் துறை திருத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியான தரவுகளின் அடிப்படையில், 2023/2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 277,398 மாணவர்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

சீனாவிற்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் 75 ஏழை நாடுகள்

சீனாவிற்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடும் நெருக்கடியில் 75 ஏழை நாடுகள்

இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மீது கூடுதல் சோதனை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களை சமூக ஊடகங்கள் மூலம் கண்காணிப்பதை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், ஜனாதிபதியின் கடுமையான குடியேற்றக் கொள்கையை நிறைவேற்றுவதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாடுகடத்தலை அதிகரிக்கவும், மாணவர் விசாக்களை ரத்து செய்யவும் முயல்கிறது.

சீன மாணவர்களின் விசாக்களை உக்கிரமாக ரத்து செய்ய முடிவு செய்த வல்லரசு நாடு | Trump To Revoke Chinese Students Visas

300,000 சீன மாணவர்கள்

செவ்வாயன்று, அனைத்து வெளிநாட்டு மாணவர் விசா விண்ணப்பங்களையும் நிறுத்துமாறு அமெரிக்க தூதரகங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. 2023-2024 கல்வியாண்டில், சாதனை படைக்கும் வகையில் 1.1 மில்லியன் சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா வாய்ப்பளித்தது, இதில் 10,000 பிரித்தானிய மாணவர்களும் அடங்குவர்.

சீன மாணவர்களின் விசாக்களை உக்கிரமாக ரத்து செய்ய முடிவு செய்த வல்லரசு நாடு | Trump To Revoke Chinese Students Visas

வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த மாணவர்களால் கல்வி, வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் மூலம் அமெரிக்கா 43.8 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியது.

சீன மாணவர்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த உக்கிர நடவடிக்கை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கல்வி உறவுகளை இறுக்கும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

 ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த கடும்போக்கு நடவடிக்கைகளால் தற்போது சுமார் 300,000 சீன மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US