போர் நிறுத்தம் குறித்து புடின் - ஜெலென்ஸ்கியுடன் பேசுவேன்! டிரம்ப் அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் போர் நிறுத்தம் குறித்து பேசுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே உலுக்கி வருகிறது.
இந்நிலையில், போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாட்டு பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
துருக்கி அதிகாரிகள் நடுநிலை வகித்த இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைபேசியில் பேச உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாரத்திற்கு சராசரியாக 5000-க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் வீரர்களின் உயிரைப் பறிக்கும் இந்தப் போரை நிறுத்துவது குறித்து விவாதிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு, நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தப் போருக்கு ஒரு தீர்வு காணும் முயற்சிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |