சீக்கிரத்தில் ட்ரம்பும் எலான் மஸ்கும் மோதிக்கொள்வார்கள்: நாள் குறித்த ஜோதிடக்கலை நிபுணர்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், அவரது கோடீஸ்வர நண்பரான எலான் மஸ்கும் இன்னும் சில மாதங்களில் மோதிக்கொள்வார்கள் என்று கூறியுள்ள பிரபல ஜோதிடக்கலைஞர் ஒருவர், அதற்கான நாளையும் கணித்துள்ளார்.
ட்ரம்பும் எலான் மஸ்கும் மோதிக்கொள்வார்கள்
பிரபல பிரித்தானிய ஜோதிடக்கலைஞரான இன்பால் (Inbaal Honigman), ட்ரம்பின் ராசிக்கு அவர் 'double personality' கொண்டவராக இருப்பார் என்கிறார்.
அதாவது, இரண்டு முகம் கொண்டவராக, மாற்றி மாற்றி பேசுபவராக ட்ரம்ப் இருப்பார் என்கிறார் இன்பால்.
ட்ரம்ப், எலான் மஸ்க் ஆகிய இருவரில், ஒருவர் மற்றவரைவிட உண்மையாக இருப்பார் என்றும், மே மாதம் 24ஆம் திகதிக்கும் ஜூன் மாதம் 26ஆம் திகதிக்கும் இடையில் இருவரும் மோதிக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் இன்பால்.
ட்ரம்பின் ராசிப்படி அவர் தன் சிறந்த நண்பர்களை மாற்றிக்கொண்டே இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் இன்பால்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |