போருக்கு நடுவே... ஈரானுக்கு மிகப்பெரிய பொருளாதார உதவிக்கு வாய்ப்பளித்த ட்ரம்ப்
ஈரான் மீதான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், ஒரு மாத கால உரிமத்தின் கீழ் கடலில் தேங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் நீக்க உள்ளது.
முழுப் பயனாளியாக
வெள்ளிக்கிழமை முதல் கப்பல்களில் ஏற்றப்படும் ஈரானிய எண்ணெய்க்குப் பொருந்தும் இந்த இடைநிறுத்தம், ஏப்ரல் 19 அன்று முடிவடைய உள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் காரணமாக அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளைக் குறைக்க வெள்ளை மாளிகை முயன்று வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், போருக்கு மத்தியிலும் ஈரானிய எண்ணெயின் முழுப் பயனாளியாக சீனா இருப்பதைத் தடுக்கும் ஒரு வழியாக இந்த நடவடிக்கையை கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் முன்னதாகப் பரிந்துரைத்திருந்தார்.
ஈரானுக்கு இப்படியான ஒரு சலுகை அளிப்பதன் ஊடாக, அமெரிக்கா சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலக சந்தைகளுக்கு சட்டப்பூர்வமாகக் கொண்டு வருகிறது.
இருப்பினும், ஏற்கனவே பயணப்பட்டுள்ள 440 மில்லியன் பீப்பாய் விற்பனைக்கு மட்டுமே இச்சலுகைகள் பொருந்தும். புதிதாக உற்பத்தி செய்வதையோ, புதிய ஒப்பந்தமோ முன்னெடுக்க முடியாது.
ஈரானுக்கு தற்போது அளித்துள்ள சலுகைகளால் எண்ணெய் விலை சரிவடையும் என்பதுடன், ஹார்முஸ் நீரிணையில் இந்தக் கப்பல்கள் கடந்து செல்லவும் வாய்ப்பாக அமையும்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் எண்ணெய் விலைகளைக் குறைக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறிவந்தபோதிலும், சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
பொருளாதார ஆதாயம்
ட்ரம்பின் இந்த 30 நாள் சலுகை காரணமாக ஈரானிய எண்ணெய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஒரு சூழல் உருவாகவில்லை என்றே முன்னாள் கருவூல அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
1979 புரட்சிக்குப் பிறகு ஈரானிய எண்ணெய் அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க அளவில் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் போருக்கு நடுவே ஈரானுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பொருளாதார ஆதாயம் இதுவென்றும் கூறுகின்றனர். ஈரான் போர் தொடங்கியதன் பின்னர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வரும் ட்ரம்ப் நிர்வாகம், முன்னதாக சில ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிகள் மீதான தடைகளை 30 நாட்களுக்குத் தளர்த்தியது.

இந்த உரிமத்தில், வட கொரியா அல்லது கியூபாவைத் தவிர எந்த நாடும் இறக்குமதி செய்துகொள்ளலாம். ஈரானில் போர் தொடங்கியதன் பின்னர் இதுவரை 90 கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளது.
இருப்பினும், ஈரான் மட்டும் எண்ணெய் ஏற்றுமதியை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலை 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் மேல் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |