ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க ஜெலென்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப்
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்குமாறு ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
புடின் மிரட்டல்
நிபந்தனைகளுக்கு உக்ரைன் இணங்கவில்லை என்றால் அந்த நாட்டை அழித்துவிடுவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் கிழக்கு டான்பாஸ் பகுதி முழுவதையும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க ஜெலென்ஸ்கியை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
விளாடிமிர் புடினுடன் முந்தைய நாள் ட்ரம்ப் முன்னெடுத்த தொலைபேசி அழைப்பில், இரு தலைவர்களும் விவாதித்ததையே ட்ரம்ப் ஜெலென்ஸ்கியிடம் ஒப்புவித்துள்ளார்.
உக்ரைன் இறுதியில் ட்ரம்பை தற்போதைய ரஷ்யாவின் முன்னேற்றத்தை முடக்குவதற்கு ஒப்புதல் அளிப்பதில் வெற்றி கண்டது. மேலும், ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்குப் பிறகு, இரு தரப்பினரும் போர்க்களத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது முக்கியமான விடயம் என்று ஜெலென்ஸ்கியும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவை தொடர்ந்து எதிர்கொள்வதற்கான ஆயுதங்களைக் கோரும் பொருட்டு ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகைக்கு வந்தார்.
ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் சமாதான ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் அதிக நோக்கம் கொண்டவராகவே காணப்பட்டார். மேலும், ஜெலென்ஸ்கி கோரிக்கை வைத்த Tomahawk ஏவுகணைகளையும் வழங்க மறுத்தார்.
போர் உக்கிரமடையும்
உக்ரைனுக்கு அந்த ஏவுகணைகள் வழங்கப்பட்டால், போர் உக்கிரமடையும் ஆபத்து இருப்பதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். அத்துடன், எதிர்காலத்தில் ஏதேனும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் Tomahawk ஏவுகணைகள் அமெரிக்காவிற்கு தேவைப்படும் என்றார்.
சுமார் 4,500 ஏவுகணைகள் கைவசம் வைத்திருக்கும் அமெரிக்கா, அதில் 50 அல்லது 100 ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதில் தயக்கம் காட்டியுள்ளது. இந்த நிராகரிப்புக்கு பின்னால் ரஷ்ய ஜனாதிபதியின் கோரிக்கையாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.
இதனிடையே, உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க ட்ரம்பும் புடினும் மீண்டும் சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் திகதி அலாஸ்காவில் நடந்த சந்திப்பு முழுமையாக தோல்வியில் முடிந்துள்ள நிலையில், மீண்டும் இரு தலைவர்களும் சந்திப்பதில் புதிதாக எந்த தாக்கவும் ஏற்படப் போவதில்லை என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |