அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு
விவாத்திற்குரிய மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்க முடியாது
மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதன் ஊடாக பாலஸ்தீன அரசுக்கான நம்பிக்கையை சிதைக்க விரும்பும் சில தீவிர வலதுசாரி இஸ்ரேல் அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் இதனால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையை இணைக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தமது கூட்டணி கட்சிகளிடமிருந்து சில அழுத்தங்களை எதிர்கொண்டார். ஆனால் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பிடம் விவாதித்துள்ளனர்.
இதனையடுத்தே, மேற்குக்கரை தொடர்பில் இஸ்ரேலை அனுமதிக்க முடியாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இப்படியான ஒரு நகர்வு இனி நடக்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நாடுகளில் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகியவை அடங்கும். மேற்கத்திய நாடுகளின் இந்த முடிவு இஸ்ரேலை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
இஸ்ரேலிய குடியேறிகள்
1967 போரில் இஸ்ரேல் மேற்குக் கரையைக் கைப்பற்றியதிலிருந்து இஸ்ரேலிய குடியேற்றங்கள் அளவிலும் எண்ணிக்கையிலும் வளர்ந்துள்ளன. இஸ்ரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு அமைப்புடன் இஸ்ரேலிய மக்கள் மேற்குக்கரையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.
மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் 2.7 மில்லியன் பாலஸ்தீனியர்களிடையே சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் வாழ்கின்றனர். இருப்பினும் இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |