ரஷ்ய அச்சுறுத்தலுக்கு... போலந்துக்கு ஆதரவளிப்போம்: ட்ரம்ப் அறிவிப்பு
ரஷ்யாவால் அச்சுறுத்தலுக்கு இலக்கானால், போலந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எஸ்டோனிய வான்வெளியில்
ரஷ்யா அச்சுறுத்தலைத் தீவிரப்படுத்தினால், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களைப் பாதுகாக்க ட்ரம்ப் உதவ முன்வருவாரா என்று கேள்விக்கு, உடனடியக பதிலளித்த ட்ரம்ப், கண்டிப்பாக என்றார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை நடந்த ஊடுருவலைத் தொடர்ந்து திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்ட எஸ்தோனியா கோரியுள்ளது.
பின்லாந்து வளைகுடாவில் எஸ்டோனிய வான்வெளியில் மூன்று ரஷ்ய மிக்-31 போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. இச்சம்பவம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவிலிருந்து கடும் எதிர்ப்பை தூண்டியது, ஆனால் ரஷ்யா தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பால்டிக் நாடுகளில் நேட்டோவின் வான் பாதுகாப்பு ஆதரவு பணியில் இத்தாலிய F-35 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. ஸ்வீடன் மற்றும் பின்லாந்து போர் விமானங்களும் களமிறக்கப்பட்டன.
17 ரஷ்ய ட்ரோன்கள்
ரஷ்ய விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டன. இந்த நிலையில், எஸ்டோனிய விவகாரம் தொடர்பில் நேரிடையாக விளக்கமளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, நாங்கள் அதை விரும்புவதில்லை என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 17 ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்தன, இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த ட்ரம்ப், தவறுதலாக நடந்த சம்பவமாக இருக்கலாம் என்றே குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |