இன்றே போர் முடிவுக்கு வர வேண்டும்: இல்லையென்றால்..! டிரம்ப் எதிர்பார்ப்பது என்ன?
பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வராவிட்டால் நான் மகிழ்ச்சி அடைய மாட்டேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்-புடின் சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் இன்று அலாஸ்காவின் அன்கோரேஜ் நகரில் சந்தித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குழுவுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான குழுவுக்கும் இன்னும் சற்று நேரத்தில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த சந்திப்புக்கு முன்னதாக, ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், பேச்சுவார்த்தையின் இறுதியில் எட்டப்படும் முடிவு குறித்து தனது எதிர்பார்ப்பை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது நடைபெறாவிட்டால் மகிழ்ச்சி அடைய மாட்டேன்
அதில், எனக்கு தேவை போர் நிறுத்தம், இந்த சந்திப்பை எது வெற்றியடை செய்யும் என்று எனக்கு தெரியாது, மேலும் அதை உங்களிடம் தெரிவிக்கவும் இயலாது, ஏனென்றால் எதுவும் கல்லில் பதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு விரைவாக போர் நிறுத்தத்தை பார்க்க வேண்டும், அது இன்று நடைபெறாவிட்டால் நான் இன்று மகிழ்ச்சியடைய மாட்டேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |