மூன்றாம் உலகப்போரின் உச்சத்தில் இருக்கிறோம்! இதில் தான் சண்டை நடக்கும்..எச்சரிக்கும் டொனால்டு டிரம்ப்
நாம் இப்போது மூன்றாம் உலகப்போரின் உச்சத்தில் இருக்கிறோம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் நேர்காணல்
டொனால்டு டிரம்ப் நியூஸ்மேக்ஸ் ஊடகத்திடம் அளித்த நேர்காணலில் நாட்டின் நிலை மற்றும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவித்தார்.
Reuters
பைடன் குறித்து பேசிய டிரம்ப், ரஷ்யா மற்றும் சீனா, சவூதி அரேபியா ஆகியவை அமெரிக்காவின் பலவீனத்தை உணர்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர் உலகை பாதுகாப்பானதாக ஆக்கவில்லை என்றார்.
அணு ஆயுத தாக்குதல்
மேலும் டிரம்ப் கூறுகையில், 'நாம் இப்போது மூன்றாம் உலகப்போரின் உச்சத்தில் இருக்கிறோம். அது ராணுவ டாங்கிகள் ஒன்றையொன்று துப்பாக்கியால் சுடும் சண்டையாக இல்லாமல் அணு ஆயுத தாக்குதலாக இருக்கும்.
உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவும், சீனாவை கட்டுப்படுத்தவும் என உறுதியளிக்கிறேன். எனது மனைவி (மெலனியா) தேர்தல் பிரச்சாரத்திற்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்கிறார். அதேபோல் நம் நாட்டிற்கு என்ன நடக்கிறது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என அவர் துக்கமாக கூறினார்.
என் மீது ஜோ பைடன் வைக்கும் சமீபத்திய குற்றச்சாட்டு என்பது 2024ஆம் ஆண்டு அவரது ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி கவலைப்பட்டதற்கான அறிகுறி ஆகும்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆகத்து 23ஆம் திகதி மில்வாக்கியில் நடைபெறும் முதல் குடியரசு கட்சியின் முதன்மை விவாதத்தில் கலந்துகொள்வாரா என்பது குறித்து அடுத்த வாரம் அறிவிப்பதாக கூறினார்.
REUTERS
Omar Haj Kadour/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |