ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை- பாகிஸ்தானில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை
அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரான் அமெரிக்காவின் சமரச ஒப்பந்தத்தை நிராகரித்தால், பாலங்கள், மின்நிலையங்கள் போன்ற முக்கிய அடிப்படை வசதிகள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அமெரிக்கா, ஈரான் உடனடியாக யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், ஈரான் அதை மறுத்ததால் பேச்சுவார்த்தை முறிந்தது.

இதையடுத்து, அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையில் கடற்படை முற்றுகை நடவடிக்கை மேற்கொண்டது.
ட்ரம்ப், “என் பிரதிநிதிகள் நாளை இஸ்லாமாபாத் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், ஈரான் ஒப்பந்தத்தை நிராகரித்தால், கடுமையான தாக்குதல்களை தவிர்க்க முடியாது” என Truth Social-ல் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் பாகிஸ்தானுக்கு வரவுள்ளனர். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்படுமா அல்லது போர் சூழ்நிலை மேலும் மோசமடையுமா என்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த எச்சரிக்கை உலகளாவிய எண்ணெய் விலை, வர்த்தக பாதைகள் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் நிலைமை மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |