எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக... ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள மக்களைக் கொல்ல ஈரான் முடிவு செய்தால், தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் தயாராக அமெரிக்கா இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆறு பேர் கொல்லப்பட்டதாக
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டின் பல நகரங்களில் வியாழக்கிழமை அன்று போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

இந்த அமைதியின்மை தீவிரமடைந்த நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் தெஹ்ரானில் உள்ள கடைக்காரர்கள், அதிக விலைவாசி மற்றும் பொருளாதார மந்தநிலையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கை மெல்ல, நாடு முழுவதும் வியாபித்துள்ளது. இதனையடுத்து தனது Truth சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் தனது வழக்கப்படி அமைதியான போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொடூரமாகக் கொன்றால், அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும்.
இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக செயல்பட அமெரிக்கா எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் உயர் தலைவரின் மூத்த ஆலோசகரான அலி லாரிஜானி தெரிவிக்கையில்,
ஈரானிய அரசியல் மற்றும் சமுகப் போராட்டங்களில் அமெரிக்கா தலையிட முயற்சிப்பது இப்பிராந்தியம் முழுவதும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஈரானில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தில், பல மாகாணங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளது, இதில் பலர் மரணமடைந்துள்ளனர்.
கலவரத் தடுப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பின்வாங்கப் போவதில்லை என்று சபதம் செய்த போராட்டக்காரர்களைப் பெருமளவில் கைது செய்துள்ளனர்.
ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம்
வியாழக்கிழமை இரவு நெருங்கியதும், மேலும் பல நகரங்கள் போராட்டங்களில் இணைந்தன. பல இடங்களில் மோதல்கள் தீவிரமடைந்தன. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கூடுதல் படைகளை அனுப்பினர்.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை
தெருக்களில் திரண்டிருந்த மக்கள், இந்த ஆண்டு இரத்தத்தின் ஆண்டு, சையத் அலி தூக்கி எறியப்படுவார் மற்றும் சர்வாதிகாரிக்கு மரணம் உறுதி என்பது போன்ற அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
கண்மூடித்தனமான மேற்கத்தியத் தடைகளால் 40 சதவீத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு முக்கியமான தருணத்தில் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக சமிக்ஞை செய்ய முயற்சி செய்து வருகிறார். ஈரானின் ரியால் நாணயம் வேகமாக மதிப்பு இழந்திருப்பதாலும், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது சுமார் 1.4 மில்லியன் ரியாலாக இருப்பதாலும், தன்னால் அதிகம் எதுவும் செய்ய முடியாது என்பதை பெசெஷ்கியான் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஈராக்கில் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப்படைகளின் போருக்கு முன்னர் டொலருக்கு எதிரான அங்குள்ள தினாரின் மதிப்பும் தற்போதைய மதிப்பும் ஒப்பிடுகையில், மத்திய கிழக்கு நாடுகளை மேற்கத்திய வல்லரசுகள் திட்டமிட்டு நசுக்கி வருவது புலப்படும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |