வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை கைப்பற்றிய ட்ரம்பின் போர்க்கப்பல்கள்! அதிகரித்த பதற்றம்
டொனால்ட் ட்ரம்பின் போர்க்கப்பல்கள் வெனிசுலாவின் எண்ணெய் டேங்கரை கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
சீனாவிற்கு எண்ணெய் வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இது நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியில் 55 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான இடமாக இருந்து வருகிறது.
அந்நாட்டின் முக்கிய வருடாந்திர வருவாய் என்பது ரஷ்யா, சீனா மற்றும் பிற கரீபியன் நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இருந்து வருகிறது.
வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) பதவி விலக வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் கூறியதுடன், அந்நாட்டின் மீது எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்.
கைப்பற்றிய போர்க்கப்பல்கள்
இந்த நிலையில், வெனிசுலாவின் கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கரை ட்ரம்பின் போர்க்கப்பல்கள் கைப்பற்றியுள்ளன. 
அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆனால், இது எங்கு நடந்தது என்று அதிகாரிகள் துல்லியமாக கூறவில்லை என்றும், எண்ணெய் டேங்கரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் டெய்லி மெயில் கூறுகிறது.
வெனிசுலாவின் எண்ணெய் விநியோகத்தில் தலையிட ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். 
'இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே இது மிகப்பெரியது..இப்போது வேறு விடயங்கள் நடக்கின்றன' என ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரோவின் அரசு கடந்த மாதம், ஒரு நாளைக்கு 900,000 பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயை ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |