புடினையும் கைது செய்வீர்களா என கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்: ட்ரம்பின் உடனடி பதில்
வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்ததுபோல புடினையும் கைது செய்வீர்களா என ட்ரம்பிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, ஒரு கணம் கூட தயங்காமல் அதற்கு பதிலளித்தார் ட்ரம்ப்.
உக்ரைன் ஜனாதிபதியின் கருத்து
ட்ரம்ப் வெனிசுலா ஜனாதிபதியான மதுரோவைக் கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ஒரு சர்வாதிகாரி இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்றால், அடுத்து என்ன செய்வது என்று அமெரிக்காவிற்குத் தெரியும் என்று கூறினார்.

அதாவது, மறைமுகமாக ரஷ்ய ஜனாதிபதியைக் குறித்து குறிப்பிட்டார் ஜெலன்ஸ்கி.
புடின் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்
இந்நிலையில், ஜெலன்ஸ்கியின் கருத்து தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார் ஊடகவியலாளர் ஒருவர்.
Reporter: Would you ever order a mission to capture Vladimir Putin?
— Clash Report (@clashreport) January 9, 2026
Trump: Well, I don’t think that’s going to be necessary. pic.twitter.com/gcZwzJm3s0
மதுரோவைக் கைது செய்ததுபோல, புடினையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பீர்களா என கேட்டார் அவர்.
அதற்கு ஒரு கணம் கூட யோசிக்காமல் பதிலளித்த ட்ரம்ப், அதற்கு அவசியம் இருக்காது என நான் நினைக்கிறேன் என்றார்.
அத்துடன், நாம் எப்போதுமே அவருடன் நல்ல ஒரு உறவைக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து அவருடன் நல்ல உறவிலிருப்போம் என்று நினைக்கிறேன் என்றும் கூறினார் ட்ரம்ப்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |