விளாடிமிர் புடினை மீண்டும் நேரில் சந்திக்கும் ட்ரம்ப்: இந்த முறை ஐரோப்பாவில்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில், ரஷ்யாவின் விளாடிமிர் புடினை மீண்டும் சந்திக்க இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேரில் சந்தித்து
ஏற்கனவே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரு தலைவர்களும் நேரில் சந்தித்து உக்ரைன் போர் தொடர்பில் விவாதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தும், அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுடன், இந்த சந்திப்புக்கு பின்னரே, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவை ஆதரிப்பதாக குறிப்பிட்டு இந்தியா மீது பழி வாங்கும் வரி விதித்துள்ளார்.
அதே வேளை, ரஷ்யா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் சீனா மீதும் சில ஐரோப்பிய நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியும் வருகிறார். இந்த நிலையில், விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பிலும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
புடின் ஆதரவாளர்
உயர்மட்ட குழு ஒன்று அடுத்த வாரம் புடின் அதிகாரிகளுடன் நேரில் சந்தித்து விவாதிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் ட்ரம்ப் - புடின் சந்திப்பு தொடர்பான திகதி உறுதி செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் இருவரும் சந்திக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஹங்கேரியின் பிரதமர் Viktor Orban தீவிர புடின் ஆதரவாளர் என்பதுடன், அமெரிக்காவில் ட்ரம்ப் கட்சிக்கும் மிக நெருக்கமானவர்.
இதனாலையே புடாபெஸ்ட்டில் இருவரும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் போருக்கும் பின்னரும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்துவரும் Viktor Orban ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் ரஷ்யாவிற்கே முதல் விஜயம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |