ட்ரம்ப் அமைக்கும் Board of Peace - உறுப்பினராக 1 பில்லியன் டொலர் கட்டணம்
ட்ரம்ப் முன்மொழிந்துள்ள Board of Peace அமைப்பில் உறுப்பினராக 1 பில்லியன் டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகள் “Board of Peace” எனப்படும் புதிய அமைப்பில் உறுப்பினராக இருக்க 1 பில்லியன் டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Bloomberg வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த அமைப்பு ஐ.நா.விற்கு மாற்றாக உருவாக்கப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ட்ரம்ப் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சாசனத்தின் படி, அவர் அமைப்பின் முதல் தலைவராக இருப்பார். ஒவ்வொரு உறுப்பினருக்கும் மூன்று ஆண்டுகள் காலம் வழங்கப்படும்.
ஆனால், முதல் ஆண்டிலேயே 1 பில்லியன் டொலர் செலுத்தும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கும்.

இந்த அமைப்பின் நோக்கம், “நிலைத்தன்மையை மேம்படுத்துதல், சட்டபூர்வ ஆட்சி மீட்பு, மற்றும் மோதல் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்துதல்” என சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவுகள் பெரும்பான்மையால் எடுக்கப்பட்டாலும், இறுதி முடிவுக்கு தலைவரின் ஒப்புதல் அவசியம்.
வெள்ளை மாளிகை விளக்கம்
வெள்ளை மாளிகை, இந்த அறிக்கையை 'தவறான விளக்கம்' எனக் கூறி, “1 பில்லியன் டொலர் கட்டணம் கட்டாயம் இல்லை. அமைதிக்கும், பாதுகாப்புக்கும், வளத்திற்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பை காட்டும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்படும்” என விளக்கமளித்துள்ளது.
சில விமர்சகர்கள், ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் அமைப்பை நீண்டகாலமாக விமர்சித்து வந்ததால், இதன் மூலம் புதிய சர்வதேச அமைப்பை உருவாக்க முயற்சி செய்கிறார் எனக் கூறுகின்றனர்.
Board of Peace குறித்த ட்ரம்பின் யோசனை, உலக அரசியல் அமைப்பில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump 1B USD Board of Peace entry fee 2026, Trump proposes Board of Peace membership cost, Trump 1 billion Dollar fee global peace council, Trump Board of Peace international funding plan, Trump Board of Peace vs United Nations idea, Trump global peace organization membership fee, peace board, Trump Board of Peace permanent membership cost, Trump Board of Peace political controversy 2026, Trump Board of Peace global reaction news