ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் 'பாதுகாப்புக் கட்டணம்' விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக விளங்கும் இந்த நீரிணை, தினசரி சுமார் 21 மில்லியன் பீப்பாய் எண்ணெய் எடுத்துச்செல்லப்படும் இடமாகும்.
ஆசிய நாடுகள் அதிக பாதிப்பு
இந்த புதிய கட்டணம், உலகளாவிய எண்ணெய் விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. குறிப்பாக, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் அதிக அளவில் ஹார்முஸ் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. இதனால், அவர்களின் எண்ணெய் செலவுகள் 15-20 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

“அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. அதற்கான செலவை உலகம் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் ஈரான் மீது அழுத்தம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிற்கு பாதிப்பு
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு மட்டும் ஆண்டுக்கு 10 பில்லியன் டொலர் வரை கூடும் என மதிப்பிடப்படுகிறது. இதனால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய வர்த்தக வல்லுநர்கள், இந்த கட்டணம் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை உயர்த்தும் என்றும், பல நாடுகளின் பொருளாதாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
ஹார்முஸ் நீரிணை, உலகின் முக்கியமான எரிசக்தி நரம்பு எனக் கருதப்படுகிறது. அதில் அமெரிக்காவின் புதிய நடவடிக்கை, உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |