ட்ரம்பின் காசா அமைதிக் குழு - உலக தலைவர்களுக்கு அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பை மேற்பார்வையிட புதிய அமைப்புகளை உருவாக்கியுள்ளார்.
இதில் முக்கியமானது “Board of Peace”, இதற்கு உலகின் பல தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, இந்த அமைப்பில் மூன்று பிரிவுகள் உள்ளன:
1- முக்கிய குழு (Board of Peace)
ட்ரம்ப் தலைவராக இருப்பார். இதில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர், World Bank தலைவர் அஜய் பங்கா உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.

2- தேசிய நிர்வாகக் குழு (National Committee for Gaza)
காசாவின் அடிப்படை சேவைகள் மற்றும் தினசரி வாழ்க்கையை மீட்டெடுக்கும் பொறுப்பு. இதை அலி ஷாத்த் தலைமையேற்கிறார்.
3- காசா நிர்வாக குழு (Executive Board)
காசா மக்களுக்கு சேவைகள் வழங்கும் ஆலோசனை குழு. இதில் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹாகன் ஃபிடான், எகிப்து உளவுத்துறை தலைவர் ஹசன் ரஷாத், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் ரீம் அல்-ஹாஷிமி, இஸ்ரேலிய பில்லியனர் யாகிர் கபாய் உள்ளிட்டோர் உள்ளனர்.
மேலும், இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன், எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா போன்ற தலைவர்களும் அழைக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் நோக்கம், காசா பகுதியின் நிர்வாக திறனை மேம்படுத்துதல், மறுசீரமைப்பு, முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின்இந்த Board of Peace உலக அரசியல் மற்றும் மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump Gaza Board invited leaders 2026, Trump Gaza peace board Meloni Erdogan Sisi, Trump Gaza Board of Peace world leaders list, Trump Gaza Board international invitations news, Trump Gaza Board Orban Abdullah II participation, Trump Gaza Board global political reactions, Trump Gaza Board Middle East peace initiative, Trump Gaza Board invited leaders controversy, Trump Gaza Board NDTV report 2026 update, Trump Gaza Board global diplomacy effort