ஆற்றல் நெருக்கடியை இணைந்து எதிர்கொள்வோம்: பிரித்தானிய, பிரான்ஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை
ஆற்றல் நெருக்கடியை இணைந்து எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தலைவர் ஒப்புதல்.
எரிசக்தி விலையேற்றம் மற்றும் வரி விதிப்பு தொடர்பான புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் லிஸ் ட்ரஸ்.
ஆற்றல் நெருக்கடியை இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் கொரோனா காலத்து ஊரடங்கு நடவடிக்கையில், விதிமுறைகளை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
GETTY IMAGES
இதனை தொடர்ந்து நடைபெற்ற பிரித்தானிய பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லிஸ் ட்ரஸ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய போரினால் அதிகரித்து வரும் எரிசக்தி விலையேற்றம் மற்றும் வரி விதிப்பு தொடர்பான புதிய திட்டங்களை நாட்டிற்கு அறிவித்தார்.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இருவரும் ஆற்றல் நெருக்கடியை இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் வலுவான உறவை இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: மிகப் பிரம்மாண்டமாய் கட்டியெழுப்படும் ”மூன் துபாய்” ஹோட்டல்: மலிவு விலையில் விண்வெளி சுற்றுலா
மேலும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய பிரச்சினைகள் குறித்து விவாதித்தாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.