இதுக்கு பேர் தான் பிரதர் 'கர்மா'., பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு சோயிப் அக்தருக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி
2022 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பிறகு, சோயிப் அக்தரின் இதயம் உடைந்த ட்வீட்டுக்கு முகமது ஷமி ட்விட்டரில் ஒரு வலுவான பதிலைக் கொடுத்தார்.
அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியுற்ற இந்திய அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தருக்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
சோயிப் அக்தர் விமர்சனம்
அரையிறுதியில் தோல்விக்குப் பிறகு இந்தியாவைக் கடுமையாக விமர்சித்த அக்தர், இந்திய அணியின் ஆட்டம் அம்பலப்பட்டுவிட்டதாகவும், அரையிறுதிக்கு வருவது பெரிய விஷயமில்லை என்றும் எம்சிஜியில் பாகிஸ்தானை சந்திக்க இந்தியாவுக்கு தகுதி இல்லை என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி, முகமது ஷமியை குறிப்பிட்டு, அவர் அணியில் இடம் பெற தகுதியற்றவர் என்று அக்தர் கடுமையாக விமர்த்து இருந்தார்.
அக்தர் தனது யூடியூப் சேனலில், "திடீரென்று அவர்கள் ஷமியை அணியில் சேர்த்தனர், அவர் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர், ஆனால் அணியில் இருப்பதற்கு அவர் தகுதியற்றவர்" என்று கூறினார்.
மென் இன் கிரீன் தோல்வி
இந்நிலையில், இன்று நடந்த 2022-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, இங்கிலாந்து அணியிடம் கடுமையான தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் மென் இன் கிரீன் அணி தோல்வியடைந்ததால், சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதயம் உடைந்துபோன எமோஜியை பதிவிட்டார்.
இதுக்கு பேர் தான் பிரதர் 'கர்மா'
அந்த ட்வீட்டுக்கு உடனடியாக பதிலளித்த முகமது ஷமி, "சாரி பிரதர் இதைத் தான் கர்மா என்று அழைப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதில் ட்வீட் மிகவும் வைரலானது.
Sorry brother
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
It’s call karma ??? https://t.co/DpaIliRYkd