ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றாக... இந்தியா, சீனா போன்று முடிவெடுத்த துருக்கி
ரஷ்யா மீதான சமீபத்திய மேற்கத்திய தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக துருக்கியின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யா அல்லாத பிற நாடுகளிலிருந்து அதிக எண்ணெயை வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா போன்ற நடவடிக்கை
ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடுகளில் சீனா மற்றும் இந்தியாவை அடுத்து துருக்கி மூன்றாமிடத்தில் உள்ளது. ஆனால் துருக்கிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது இந்தியா போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.

உக்ரைனில் போருக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் ரஷ்ய எண்ணெய் விற்பனையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா முன்னெடுத்துள்ள முயற்சிகளின் தாக்கமாகவே இது பார்க்கப்படுகிறது.
துருக்கியின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்றான STAR சமீபத்தில் ஈராக், கஜகஸ்தான் மற்றும் பிற ரஷ்யரல்லாத உற்பத்தியாளர்களிடமிருந்து நான்கு கப்பல் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.
இது நாளுக்கு 77,000 முதல் 129,000 பீப்பாய் அளவு என்றே கூறப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் STAR நிறுவனம் நாள் ஒன்றிற்கு 210,000 பீப்பாய்கள் அளவில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
தற்போது டிசம்பர் மாதத்திற்கு என STAR நிறுவனம் ஒரு கப்பல் கச்சா எண்ணெய் இறக்குமதியை கஜகஸ்தானில் இருந்து முன்னெடுத்துள்ளது. STAR நிறுவனம் போன்று துருக்கியின் Tupras நிறுவனமும் ரஷ்யாவை தவிர்த்து, அதே தரத்தில் இருக்கும் ஈராக்கிய கச்சா எண்ணெய் இறக்குமதியை முன்னெடுத்துள்ளது.

ரஷ்ய இறக்குமதி
ரஷ்யாவை மட்டுமே நம்பியிருந்த துருக்கி நிறுவனங்கள், மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாடுகளை அடுத்து, தற்போது ஈராக் போன்ற நாடுகளை நாடியுள்ளது.
துருக்கியில் இரண்டு மிகப்பெரிய ஆலைகளைக் கொண்டுள்ள Tupras நிறுவனத்தில் ஒன்று ரஷ்ய இறக்குமதியை மொத்தமாக நிறுத்தியுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் போது சிக்கல் ஏற்படாது என நம்புகிறது.

Tupras நிறுவனம்m முதல் முறையாக பிரேசில் மற்றும் அங்கோலா கச்சா எண்ணெய் இறக்குமதியை முன்னெடுக்கிறது. நவம்பர் மாதம் ஈராக்கில் இருந்து நாளொன்றிற்கு 141,000 பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதியை துருக்கி பெற உள்ளது.
ஜனவரி-அக்டோபர் மாதங்களில் துருக்கி சுமார் 669,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை நாள் ஒன்றிற்கு இறக்குமதி செய்தது. இதில் 47 சதவீதம் ரஷ்யா எண்ணெய் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |