அமெரிக்காவின் MK-84 ஐ விட மூன்று மடங்கு ஆபத்தானது... பாகிஸ்தானின் நட்பு நாடொன்று அதிரடி
உலகெங்கிலும் சமீபத்தில் வெடித்த மோதல்களை அடுத்து, துருக்கி உலகளாவிய ஆயுத சந்தையில் தனது இராணுவ திறன்களை மேம்படுத்தி வருகிறது.
மிகவும் ஆபத்தானது
முக்கிய சிறப்பம்சமாக, துருக்கி GAZAP என்ற புதிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது, GAZAP என்பதன் பொருள் ஆங்கிலத்தில் கோபம். இந்த வெடிகுண்டு முதன்முறையாக IDEF 2025 சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், GAZAP வெடிகுண்டானது தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமானது மட்டுமல்ல, வடிவமைப்பு மற்றும் தாக்கம் இரண்டிலும் மிகவும் ஆபத்தானது என்றே கூறப்படுகிறது.
இந்த குண்டு வழக்கமான குண்டுகளை விட மிகவும் ஆபத்தானது என்றும் நவீன போருக்கு தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதன் துல்லியம், வெடிக்கும் வேலையின் தீவிரம் மற்றும் பாதிப்பின் அளவு ஆகியவற்றால், இது தற்போது துருக்கியின் திறன்களுக்கு ஒரு பெரிய முன்னேற்றம் என்றே கூறுகின்றனர்.
F-16 போர் விமானங்களில்
துருக்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் GAZAP வெடிகுண்டின் எடை 970 கிலோ என்றும், வெடித்தவுடன், அது சுமார் 10,000 சிறப்பு ஆபத்தான துண்டுகளை வெடிக்கச் செய்து, அவை 10 தனித்தனி வகையான கொடிய துண்டுகளாகப் பிரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேம்பட்ட அதன் செயற்பாடு மட்டுமே இதை வழக்கமான குண்டுகளிலிருந்து வேறுபடுத்தி, போர்க்களத்தில் மிகவும் பயனுள்ளதாக மாற்றுகிறது. இந்த ஆபத்தான குண்டை F-16 போர் விமானங்களில் பயன்படுத்தலாம்.
அமெரிக்காவின் MK-84 குண்டு பல தசாப்தங்களாக நேட்டோ மற்றும் மேற்கத்திய இராணுவப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை விட மூன்று மடங்கு ஆபத்தானது இந்த GAZAP வெடிகுண்டு என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |