துருக்கி இடிபாடுகளில் தொடரும் மீட்பு பணி: 12 நாட்களுக்கு பிறகு 4 பேர் மீட்பு
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 12 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடரும் மீட்பு பணி
துருக்கி மற்றும் சிரியாவில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இதுவரை 41,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும் இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
AFP/Getty Images
அத்துடன் 200க்கும் குறைவான இடங்களில் மனிதர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
4 பேர் மீட்பு
நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான ஹடேயில் உள்ள நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 64 ஆயிரம் குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன, மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.