எலான் மஸ்கிடம் துருக்கி ஜனாதிபதி கேட்ட அந்த கேள்வி: தர்மசங்கடமான நிலைக்கு ஆளான உலக கோடீஸ்வரர்
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் எலான் மஸ்கை துருக்கி ஜனாதிபதியான எர்டகான் சந்தித்தபோது கேட்ட ஒரு கேள்வியால் தர்மசங்கடமான ஒரு சூழல் உருவானது.
துருக்கி ஜனாதிபதி கேட்ட அந்த கேள்வி
சமீபத்தில் துருக்கி ஜனாதிபதியான எர்டகான் (Tayyip Erdogan), உலக கோடீஸ்வரரான எலான் மஸ்கை சந்தித்தார். சந்திப்பின்போது எலான் மஸ்க் தனது மகனையும் உடன் அழைத்துவந்திருந்தார்.
அதைக் கண்ட எர்டகான், உங்கள் மனைவி எங்கே என்று கேட்டார். இதுபோன்ற ஒரு சந்திப்பில், இப்படி ஒரு கேள்வியை தான் எதிர்கொள்ளக்கூடும் என சற்றும் எதிர்பாராததால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான எலான் மஸ்க், ஓ, அவள் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிறாள். நாங்கள் பிரிந்துவிட்டோம். பெரும்பாலும் என் மகனை நான் தான் கவனித்துக்கொள்கிறேன் என்றார் அசடு வழிந்தபடி.
உண்மை நிலவரம் என்ன?
விடயம் என்னவென்றால், எலான் மஸ்க் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து, இருவரையும் விவாகரத்தும் செய்துவிட்டார். பின் பாப் ஸ்டாரான Grimes என்னும் பெண்ணும் எலான் மஸ்கும் சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். பின்னர் பிரிவதாகக் கூறினார்கள். ஆனால், இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன.
Erdogan: Where is your wife?
— Ragıp Soylu (@ragipsoylu) September 18, 2023
Elon Musk: Oh she, she is in San Francisco. We are separated now. That’s why I take care of my son
pic.twitter.com/zbihF0Bg2f
ஆக மொத்தத்தில், அது ஒரு குழப்பமான உறவு. அப்படி Grimesக்கும் எலான் மஸ்குக்கும் பிறந்த மகனைத்தான் இப்போது துருக்கி ஜனாதிபதி சந்திப்பின்போது எலான் மஸ்க் தன்னுடன் தூக்கிவர, அவர் உங்கள் மனைவி எங்கே என்று கேட்க, என்ன சொல்வதென தெரியாமல் அசடு வழிந்தார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் தன்னுடன் அழைத்து வந்த அவருடைய மகனுடைய பெயர் என்ன தெரியுமா? X AE A-12 Musk. அவனை X என்று அழைக்கிறார்கள்.
Xக்கு பிறகு, எலான் மஸ்க் Grimes ஜோடிக்கு Exa Dark Sideræl Musk என்றொரு பெண் குழந்தை பிறந்தது. அதை Y என்று அழைக்கிறார்கள். சமீபத்தில், எலான் மஸ்குக்கு மூன்றாவது ஒரு குழந்தை இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அந்தக் குழந்தையின் பெயர் Tau Techno Mechanicus.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |