ரஷ்யாவுடன் உறவை கைவிட்டால்... பேச்சுவார்த்தையை யார் முன்னெடுப்பது? துருக்கி அதிரடி
ரஷ்யாவுடனான தொடர்பை உலக நாடுகள் முழுமையாக கைவிட முடியாது என துருக்கி ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ரஷ்யாவின் இத்தகைய ராணுவ முன்னெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
அந்தவகையில் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுடனும் நல்ல நட்புறவை கொண்டுள்ளது, இருப்பினும் உக்ரைன் மீதான ரஷ்ய போரை ஆரம்பம் முதலே எதிர்த்த துருக்கி, ரஷ்யா மீது எந்தவொரு பொருளாதார தடையையும் விதிக்காமல், ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளிலும் இணையாமல் தவிர்த்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) துருக்கியில் நடைபெற்ற தோஹா சர்வதேச மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துருக்கி ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் இப்ராஹிம் கலின், ஒருவேளை உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடனான உறவுவை கைவிட்டால் ரஷ்யாவுடன் இறுதியில் யார் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனியர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் அப்போது தான் அவர்களால் ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து அவர்களை தற்காத்து கொள்ள முடியும், ஆனால் ரஷ்யாவின் குரலையும் எதாவது ஒருவகையில் கேட்கப்பட வேண்டும் அப்போது தான் ரஷ்யாவின் குறைகளையும் புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனியர்களுக்கு தற்காலிக தங்கும் உரிமம்: பிரான்ஸ் அரசு அறிவிப்பு!