துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: பல கட்டிடங்கள் தரைமட்டம்…521 பேர் பலி
சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளை சேர்ந்த 521 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம்
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு தென்கிழக்கு நாடுகளை 7.8 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் கிட்டத்தட்ட 521 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் கஹ்ராமன்மரஸ்(Kahramanmaras) மாகாணத்தில் பசார்சிக்(Pazarcik) நகரில் 6 மைல் ஆழத்தில் காசியான்டெப்(Gaziantep) இருந்து 20 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும், ஐந்து சக்திவாய்ந்த பின் அதிர்வுகள் இருந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tonight, two earthquakes, one with a magnitude of 7.8 and another with magnitude of 6.7, with a time difference of about ten minutes, have shaken SE & central #Turkey. Destruction caused by these are far more than #Iran's Earthquake on January 28, 2023. pic.twitter.com/tyOx09owST
— Babak Taghvaee - The Crisis Watch (@BabakTaghvaee1) February 6, 2023
உயிரிழந்தவர்களில் 284 பேர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 237 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்தோடு இரு நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்மானியா மாகாணத்தின் ஆளுநர் நிலநடுக்கத்தில் 34 கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாக தெரிவித்துள்ளார், அதைபோல மாலத்யாவின் ஆளுநர் தங்கள் மாகாணத்தில் சுமார் 130 கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள்
துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன்(Tayyip Erdogan) டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேடுதல் மற்றும் மீட்பு படையினர் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பேரழிவில் இருந்து முடிந்தவரை விரைவாக நாம் அனைவரும் வெளியேறுவோம் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் தொடர்பாக துருக்கிய குடிமகன் எர்டெம் தெரிவித்த கருத்தில், 40 வருடமாக இங்கு தான் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இதுபோன்ற பெரிய அதிர்வை உணர்ந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
SKY NEWS
மேலும் மூன்று முறை பலமாக நில அதிர்வு ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலெப்போவின் வடக்கு நகரம் மற்றும் மத்திய நகரம் ஹமா ஆகிய இடங்களில் சில கட்டிடங்கள் உருக்குலைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.