முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றது…ஸ்வீடனில் ஏற்பட்ட கலவரத்தால் துருக்கி அதிரடி முடிவு
ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுடன் நோட்டோ உரையாடலை மீட்டெடுப்பது அர்த்தமற்றது என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஸ்வீடனில் வெடித்த கலவரம்
மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியான நோட்டோவில் ஸ்வீடன் இணைவதற்கு துருக்கி முட்டுகட்டையாக இருந்து வரும் நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லாமில் உள்ள துருக்கி தூதரகம் முன்பு ஸ்வீடனின் ஸ்டேம் குர்ஸ் கட்சி தலைவர் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வந்த ரஸ்முஸ் பலுடன், ஒரு கட்டத்தில் இஸ்லாமிய மதத்தினரின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்தார்.
இது உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், இஸ்லாமிய நாடுகள் பலவும் ஸ்வீடன் மீது கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கியும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றது
இந்நிலையில் நோட்டோ உறுப்பினர் விண்ணப்பம் குறித்து விவாதிக்க ஸ்வீடன் மற்றும் பின்லாந்துடன் முத்தரப்புக் கூட்டத்தை நடத்துவது அர்த்தமற்றது என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
REUTERS
அத்துடன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் நேட்டோ உறுப்பினர்களை தனித்தனியாக மதிப்பிடும் வாய்ப்பில்லை என்றும் Cavusoglu செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
துருக்கி, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் காலவரையின்றி ஒத்தி வைத்த பின்னர், துருக்கியுடனான நேட்டோ உரையாடலை தனது நாடு மீட்டெடுக்க விரும்புவதாக ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.