துருக்கி சிரியா நிலநடுக்கம்…100 ஆண்டுகள் இல்லாத பேரழிவு இது: ஐ.நா தகவல்
துருக்கி சிரியா நிலநடுக்கம் 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நிகழ்வு என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
துருக்கி-சிரியா நிலநடுக்கம்
துருக்கி-சிரியா ஆகிய இரண்டு நாடுகளையும் கடுமையாக தாக்கிய நிலநடுக்கத்தின் விளைவாக இதுவரை சுமார் 26,000 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தவித்து வருகின்றனர்.
GETTY IMAGES
தென்கிழக்கு துருக்கியில் உள்ள 10 மாகாணங்களில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) 3 மாத கால அவசர நிலையை அறிவித்துள்ளார்.
100 ஆண்டுகள் இல்லாத நிகழ்வு
சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி மாகாணமான கஹ்ராமன்மாராஸில் நடைபெற்ற கூட்டத்தில், நடைபெற்ற இந்த பேரழிவிற்கு துருக்கியின் பிரதிபலிப்பு அசாதாரணமானது என்று குறிப்பிட்டார்.
EPA
இதற்கிடையில் நிவாரணப் பணிகளுக்கு உதவ 99 நாடுகள் முன்வந்துள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.