துருக்கியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து: 5 வீரர்கள் பலியான சோக சம்பவம்
துருக்கியில் ஏற்பட்ட விமான விபத்தில் 5 வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
துருக்கியின் தென்மேற்கு மாகாணமான இஸ்பர்ட்டாவில் நடைபெற்ற வழக்கமான பயிற்சி விமானத்தில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தில் ஐந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து இரண்டாக உடைந்துள்ளது.
🇹🇷 media: the incident in #Isparta occurred as a result of a collision btw 2 helicopters. The number of victims of the crash of a military helicopter increased to 6. Among them was the commander of the Isparta school of aviation, Brigadier General Isa Baydilli.#Turkey pic.twitter.com/NUPwM5mnoS
— Karina Karapetyan (@KarinaKarapety8) December 9, 2024
காயமடைந்த ஒரு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்த சோக சம்பவம் துருக்கியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |