திடீரென ஏற்பட்ட பள்ளம்., 20 அடி குழிக்குள் விழுந்த மனிதர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ
துருக்கியில் புகைப்பிடித்துக்கொண்டே நடந்து சென்ற நபர், திடீரென ஏற்பட்ட 20 அடி குழிக்குள் விழுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லின் கடோகோய் சுற்றுப்புறத்தில் பிப்ரவரி 4 அன்று நடந்தது.
அங்கு கடை நடத்தும் Omer Kacagan என்ற நபர், தனது இடைவெளிக்காக சிகரெட் பிடிப்பதற்காக கடையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, புகை பிடித்தபடி போன் பேசிக்கிக்கொண்ட அங்கிருந்த 2 குளிர்பான விற்பனை இயந்திரங்களை நோக்கிச் சென்றபோது, நிலம் இடிந்து விழுந்து சுமார் 20 அடி குழிக்குள் விழுந்தார்.
அவர் விழுந்த அடுத்த நொடியே அவர் மீது விற்பனை இயந்திரமும் விழுந்தது. இதனைப் பார்த்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவசர என்னை அழைக்க, அடுத்த 25 நிமிடங்களில் தீயணைப்புப் படையினரால் ஒமர் கசகன் காப்பாற்றப்பட்டார்.
குளிர்பான இயந்திரம் அவர் மீது விழுந்தபோதும் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக கககன் கூறினார்.
நிலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால், சில உள்ளூர் தகவல்களின்படி, முன்னதாக சம்பவம் நடந்த அந்த மூன்று மாடி கட்டிடத்தின் முன் தளத்தில் ஒரு கிணறு இருந்ததாகவும், அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.



