காபூல் விமான நிலையத்தில் என்ன நடக்கிறது? மக்களின் நிலை என்ன? இணையத்தை உலுக்கி வரும் ஒற்றை புகைப்படம்
காபூல் விமானநிலையத்தில் தாயிடம் இருந்து பிரிந்த குழந்தையை துருக்கி இராணுவத்தை சேர்ந்த பெண் அன்போடு அரவனைத்து முத்தமிடும் புகைப்படம் வெளியாகி, அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமானநிலையத்தில் தொடர்ந்து காத்துக் கிடக்கின்றனர்.
நம்மால் செல்ல முடியவில்லை என்றாலும், நம் பிள்ளைகளாவது வெளிநாட்டிற்கு சென்று நிம்மதியாக உயிர் வாழட்டும் என்று, குழந்தைகளை விமானநிலையத்தில் இருக்கும் இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
அப்படி ஒப்படைக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பாக வேறொரு நாட்டில் இருக்கும் தத்தெடுத்து நிறுவனத்திடம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்படி காபூல் விமான நிலையத்தில் தனது தாயிடம் இருந்து பிரிந்து சென்ற 2 மாத ஆப்கானிய குழந்தையை துருக்கி இராணுவ வீரர்கள் பாசத்துடன் கவனித்து வந்துள்ளனர்.
Turkish military took care of the baby who was separated at Kabul international airport from her mother.later she handed over to her father. pic.twitter.com/ZYQpUZgwOd
— Muslim Shirzad (@MuslimShirzad) August 21, 2021
இந்த குழந்தை முதலில் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பான புகைப்படம் மட்டும் வெளியாகியிருந்தது. இதையடுத்து தற்போது, அந்த குழந்தையின் பெயர் Farista Rahmani என்வும் பிறந்து 2 மாதமே ஆன நிலையில், விமானநிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது, குழந்தை காணமல் போயுள்ளது.
அதைத் தொடர்ந்து துருக்கி இராணுவம் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு, உணவளித்து வந்துள்ளனர். அதன் பின் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியவந்ததால், அது குழந்தையின் தந்தையிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் Hadiya Rahmani எனவும் தந்தை Ali Musa Rahmani எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த குழந்தையை தன் குழந்தை போல், துருக்கி பெண் இராணுவ வீராங்கனை பாசமாக அணைத்து முத்தமிட்டுக் கொண்ட அந்த ஒற்றை புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.