காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய தவெக - யார் வேட்பாளர்?
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதாக தவெக அறிவித்துள்ளது.
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் வழங்கிய தவெக
தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி ஆக இருந்த சி.வி. சண்முகம், 2026 சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் மாநிலங்களவை எம்பி காலியாக உள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு ஜூன் 18 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலங்களவை எம்.பி பதவியை காங்கிரஸுகு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
— TVK Party HQ (@TVKPartyHQ) June 3, 2026
இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் நிபுணர்கள் & தரவு பகுப்பாய்வு குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே விஜய்யை சந்தித்து ஆலோசித்ததோடு, தவெக காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டுமென தேர்தலுக்கு முன்பிருந்தே வலியுறுத்தி வந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |