லட்சக்கணக்கானோர் வாக்குரிமையை இழக்கும் அபாயம் - SIR குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்
தமிழ்நாட்டில் SIR பணிகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் SIR பணி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025
நவம்பர் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை வரை வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இணையதளம் வழியாகவும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Online Facility for Filling up of Enumeration Form at ECI Website.#ECI#SIR pic.twitter.com/UDUGvbi3v5
— TN Elections CEO (@TNelectionsCEO) November 9, 2025
இந்த SIR பணி மூலம், வாக்காளர்கள் பலரும் நீக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் SIR க்கு எதிராக அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற்றது.
SIR க்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தவெக அறிவித்துள்ளது.
SIR குறித்து விஜய் எச்சரிக்கை
இந்நிலையில், SIR தொடர்பான வீடியோ ஒன்றை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய அவர், "இந்திய அரசியல் சாசனம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாருக்கும் கொடுத்திருக்கும் முக்கியமான உரிமை வாக்குரிமை.

ஒரு முக்கியாமான விடயத்தை பற்றி நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன். இதைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட போது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் ஓட்டுரிமை இல்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? தற்போது நான் நீங்கள் உட்பட யாருக்கும் ஓட்டுரிமை இல்லை. நான் பயமுறுத்தவில்லை, இதுதான் உண்மை. இதே போல் லட்சக்கணக்கான மக்கள் ஓட்டுரிமையை இழக்கும் நிலை வரலாம்" என பேசியுள்ளார்.
மேலும், ஏற்கனவே ஓட்டுரிமை உள்ளவர்கள் SIR பணியின் போது என்ன செய்ய வேண்டும், புதிய வாக்காளர்கள் எந்த படிவத்தை நிரப்ப வேண்டும் என விளக்கியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025
இதில், சில சந்தேகங்கள் உள்ளது, ஒரு மாதத்தில் எப்படி 6 கோடி வாக்காளர்களுக்கு இந்த படிவம் சென்றடையும். தேர்தல் அதிகாரிகள் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் இருப்பவர்கள் வேலைக்கு சென்று விட்டால் என்ன செய்வது?
நியாயமான SIR என்றால், இறந்தவர்களின் பெயர்கள், போலி வாக்காளர்களை நீக்கலாம். ஆனால் ஏன் தற்போது வாக்காளர்களாக உள்ளவர்கள் மறுபடியும் பதிவு செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து, பல பகுதிகளில் தவெக தோழர்களுக்கு அந்த படிவத்தை தர மறுக்கிறார்கள் என புகார் வந்துள்ளது. இப்போது உள்ள ஆட்சியாளர்கள் அவர்களின் கைப்பாவையாக உள்ள சிலர் இதை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். படிவம் கிடைக்காவிட்டால் ஆன்லைனில் அந்த படிவத்தை நிரப்பி சமர்ப்பியுங்கள்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |