TVS-ன் புதிய Jupiter 110 Special Edition அறிமுகம்
TVS நிறுவனம் அதன் பிரபலமான Jupiter 110 ஸ்கூட்டரின் புதிய Special Edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.93,031 (ex-showroom) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது Jupiter வரிசையில் மிக உயர்ந்த விலை கொண்ட மொடலாகும்.
Honda Activa Smart-ஐ தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது விலை உயர்ந்த 110cc ஸ்கூட்டராகவும் திகழ்கிறது.
இந்த Special Edition Stardust Black எனும் புதிய நிறத்தில் வருகிறது. முழு உடலிலும் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், TVS Logo மற்றும் Jupiter பெயர்ப்பலகை Bronze நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.
Exhaust heat shield மட்டும் Chrome-ல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்கூட்டருக்கு stealthy மற்றும் பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

ரூ.60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்.., முழு சார்ஜில் 140 கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
Disc SXC மொடலைப் போலவே மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் வருகிறது. இதில் front disc brake, Bluetooth இணைப்பு கொண்ட digital instrument cluster ஆகியவை உள்ளன.
இதில் kick Starter இல்லை, ஆனால் தேவைப்பட்டால் கூடுதல் accessory-யாக கிடைக்கும்.
இதிலுள்ள 113.3cc Air Cooled Engine, 7.91 bhp பவர் மற்றும் 9.2Nm Torque-ஐ வழங்குகிறது. இந்த CVT automatic transmission என்ஜினில் electric assist மூலம் 9.8 Nm வரை Torque கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
TVS Jupiter 110 Special Edition 2025, Jupiter Stardust Black scooter launch, TVS Jupiter SE price rs 93,031, TVS Jupiter SE vs Activa Smart, TVS Jupiter Bluetooth features, TVS Jupiter 110cc premium variant, TVS Jupiter SE specs