பட்ஜெட் விலையில் TVS அறிமுகப்படுத்தும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
TVS Motor நிறுவனம் அவரும் ஆகஸ்ட் 28-ஆம் திகதி புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய ஸ்கூட்டர் TVS Orbiter என அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தற்போது உள்ள iQube மொடலுக்கு கீழ் நிலை மொடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
TVS Orbiter-ல் சிறிய பேட்டரி மற்றும் குறைந்த சக்தி கொண்ட மின்மோட்டார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
iQube-ல் 2.2kWh முதல் 5.3kWh வரை பல பேட்டரி விருப்பங்கள் உள்ளன. அதில் அதிகபட்சமாக 212km வரை ஒரே சார்ஜில் பயணிக்கலாம்.
Orbiter-ன் மோட்டார் Bosch இருவனத்தால் வழங்கப்படும் hub-mounted வகை மோட்டார் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இதில் LCD display மற்றும் குறைந்த அளவிலான இணைப்பு வசதிகள் போன்ற அடிப்படை அம்சங்கள் மட்டுமே வழங்கப்படும்.
இது நகர்ப்புற பயணிகளுக்கான எளிய மின்சார வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது TVS நிறுவனத்தின் மிகக்குறைந்த விலை மின்சார ஸ்கூட்டராக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
TVS Orbiter electric scooter, TVS EV launch 2025, TVS Orbiter specs, Cheapest TVS electric scooter, TVS Orbiter vs iQube, TVS Orbiter range, TVS Orbiter features, Entry-level electric scooter India