ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: அறுவை சிகிச்சைக்குப் பின் நிகழ்ந்த துயரம்
Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்.
பிரேசில் நாட்டில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், குழந்தைகளை காப்பாற்றமுடியாமல் போய்விட்டது.
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
பிரேசில் நாட்டில் அமரில்டோ டி சில்வா (Amarildo Batista da Silva) என்னும் நபருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள், தலை ஒட்டிப் பிறந்துள்ளன.

பிள்ளைகள் மூன்று வயதை எட்ட இருந்த நிலையில், பிள்ளைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
உண்மை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்த மருத்துவர்கள், பிள்ளைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை ஓராண்டாக மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
அதாவது, இதற்கு முன் பிள்ளைகளுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, அவர்களை தனியாக பிரிக்கும் கடைசி அறுவை சிகிச்சை, இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
விடயம் என்னவென்றால், வெற்றிகரமாக மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்துள்ளார்கள்.
ஆனால், ஒரு உடல் போல செயல்பட்டுவந்த அந்தக் குழந்தைகளின் உடல் பிரிக்கப்பட்டபோது, அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போயுள்ளது.
ஒரு குழந்தைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, மற்ற குழந்தைக்கு இரத்த அழுத்தம் குறைய, உடலின் உள்ளுறுப்புகளுக்கு போதுமான இரத்தம் செல்லாமல், உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
அவர்களில் ஒரு குழந்தையின் பெயர் ஹெலனா, அவளது சகோதரியின் பெயர், ஹெலோய்ஸா. ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தங்கள் மூன்று வயதை எட்டும் முன், ஹெலனா 11.37 மணிக்கும், ஹெலோய்ஸா 11. 51 மணிக்கும் உயிரிழந்துள்ளனர்.
அறுவை சிகிச்சை வெற்றியாக முடிந்த நிலையிலும், பிள்ளைகளின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
ஏற்கனவே, பிள்ளைகள் இருவருக்கும் நிமோனியா பிரச்சினை இருந்ததால் அவர்கள் தொண்டையில் துவாரமிடப்பட்டு சுவாசிப்பதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன.
அதேபோல, குழந்தைகளால் சாப்பிட முடியாததால், அவர்கள் வயிற்றில் துவாரமிடப்பட்டு குழாய் வழியாகத்தான் உணவு செலுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆக, நீண்ட காலமாக பலவீனமாக இருந்த உடல்கள் பிரிக்கப்பட, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல், மாரடைப்பு ஏற்பட, பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |